மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பாலக்காடு:கேரள மாநிலம், சொரனுார் அருகே, ரயிலில் சென்ற ஆயுர்வேத பெண் மருத்துவரின் காலை கடித்தது, பாம்பா, எலியா என, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பூக்கோட்டுபாடம் என்ற இடத்தை சேர்ந்தவர் காயத்ரி, 25. ஆயுர்வேத மருத்துவரான இவர், சொரனூரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு பணிக்கு செல்ல, நிலம்பூரில் இருந்து சொரனூருக்கு பாசஞ்சர் ரயிலில் சென்றார். அப்போது, வல்லப்புழை ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது, அவரது காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்துள்ளார்.தொடர்ந்து பெட்டியை சோதனையிட்ட பயணியர் பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டனர். கடித்தது பாம்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரை பெரிந்தல் மண்ணையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், பாம்பு கடித்ததை உறுதி செய்ய முடியாததால், அவரை கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதே நேரத்தில், சொரனூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் நடத்திய சோதனையில் பாம்புக்கு பதிலாக எலியை தான் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதனால், எலி வாலை பார்த்து, பாம்பு என, சக பயணியர் பயந்திருக்கலாம். காயத்ரியை கடித்தது எலியா, பாம்பா என்பதையும் டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
03-Oct-2025