உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் உலக வனம் தண்ணீர் தின விழா

அரசு பள்ளியில் உலக வனம் தண்ணீர் தின விழா

கூடலுார்;கூடலுார் மேபில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக வனம் மற்றும் தண்ணீர் தின நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பால்விக்டர் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் ரஷீத் முன்னிலை வகித்தார்.சீனிவாசா அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜன், 'ஆல் த சில்ட்ரன்' ஒருங்கிணைப்பாளர் அஜித், ராஜேஸ்வரி, வனக்காப்பாளர் அனில்விக்னேஷ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஷானவாஸ் ஆகியோர் வனம், தண்ணீர் பாதுகாப்பு குறித்து பேசினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில், 40 மரக்கன்றுகள் நடவு செய்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெசிக்கா, குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ