உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது

ஊட்டி:ஊட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், போராட்டத்தில் ஈடுபட்ட, 13 பெண்கள் உட்பட, 625 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி நகரில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'ஆட்டோக்களின் எல்லையை, 30 கி.மீ., துாரம் நீடித்து வழங்க வேண்டும்,' என, ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காத நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அங்கு வந்த போலீசார், 13 பெண்கள் உட்பட 625 பேரை கைது செய்து ஊட்டி சிறுவர் மன்றத்திற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ