உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டம் பயனடைந்த 7,706 மாணவர்கள்

 புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டம் பயனடைந்த 7,706 மாணவர்கள்

ஊட்டி: புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் 7,706 பேர் பயன்பெற்று வருகின்றனர். தரமான கல்வி தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கவும், உயர்கல்வியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட் டம் தொடங்கப்பட்டது. 4,115 மாணவிகள் பயன் நீலகிரி மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2022--2023 ஆம் நிதியாண்டில் 650 மாணவிகளும், 2023--2024 ஆம் நிதியாண்டில் 835 மாணவிகளும், 2024--2025 ஆம் நிதியாண்டில் 1,304 மாணவிகளும், 2025--2026 ம் நிதி ஆண்டில் அக்., 31 ம் தேதி வரை 1,326 மாணவிகள் என மொத்தம் 4,115 மாணவிகளும், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ், 2024--2025 ம் நிதி ஆண்டில் 1,750 மாணவர்களும், 2025--2026 ம் நிதி ஆண்டில் 1,841 மாணவர்கள் என, மொத்தம், 3,591 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். என்றும் இந்தத் திட்டத்தால் மாணவர்கள் பயன் பெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை