மேலும் செய்திகள்
மொட்டை வால் செந்நாய் :சுற்றுலா பயணிகள் வியப்பு
7 hour(s) ago
வாகனம் மோதி சேதமடைந்த சிக்னலை சீரமைக்கணும்
14-Nov-2025
அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
14-Nov-2025
குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்
14-Nov-2025
கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, செந்நாய்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணியர், வனத்துறை வாகன சவாரி சென்று, விலங்குகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில், புலி, செந்நாய் போன்ற விலங்குகளை ஒரு சில நேரங்களில் மட்டும் காண முடியும். இந்நிலையில், இங்கு நேற்று வாகன சபாரி சென்ற சுற்றுலா பயணியர், செந்நாய் கூட்டத்தையும், அதில் ஒன்று மொட்டைவாலுடன் இருப்பதையும் கண்டு ஆச்சரியமடைந்தனர். கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'செந்நாய் அடர்த்தியான வால் கொண்டது. 'இந்த செந்நாய் இயற்கையாக வால் இன்றி பிறந்திருக்கலாம் அல்லது குட்டியாக இருக்கும்போது மாமிச உண்ணி தாக்கியதில் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.
7 hour(s) ago
14-Nov-2025
14-Nov-2025
14-Nov-2025