உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து

மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.இதனால், குன்னுார் சிம்ஸ் பூங்கா மற்றும் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணியரின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கடந்த ஆண்டு ஜன., துவக்க வாரத்தில் நாள்தோறும், 1,000த்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில், தற்போது, 400 பேருக்கும் குறைவானவர்கள் வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்த சாரல் மழையால், பூங்கா படகு இல்ல ஏரியில் படகு சவாரி நிறுத்தப்ட்டது. சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'குன்னுாரில் மழை பெய்யும் போது மட்டும் படகு சவாரி நிறுத்தப்படும். காலநிலை மாறினால் மீண்டும் இயக்கப்படும். நடப்பாண்டு பனி விழும் மாதத்தில், மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவுவதால் சுற்றுலாப் பயணியரின் வருகை வெகுவாக குறைந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை