உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கூடலுார்: நடு கூடலுார் விநாயகர் கோவில் மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடக்கிறது.நடு கூடலுார் விநாயகர் கோவில்; மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 9:00 மணி முதல், சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடந்தது.இன்று காலை, 5:30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம்; 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில் காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும்; காலை 9:30 முதல் 10:30 மணிக்குள், மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்; இந்து சமய அறநிலைத்துறை மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை