மேலும் செய்திகள்
வன்கொடுமைக்கு எதிர்ப்பு
1 hour(s) ago
இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு
1 hour(s) ago
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
1 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
1 hour(s) ago
ஊட்டி: நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு, கால் டாக்சிகளில் பயணிகளை அழைத்து வரும் விவகாரம் தொடர்பாக, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 'கோவையில் இயங்கி வரும் கால் டாக்சிகள், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து, சுற்றுலா மையங்களுக்கு செல்வதால், உள்ளூர் வாகன ஓட்டுனர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை கால் டாக்சி நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, 'புக்கிங் ஐ.டி.,' இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது,' என, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் 'ரெட் டாக்சி'? இதனை மீறி 'ரெட்டாக்சி' வாகனங்கள், நீலகிரி மாவட்டத்திற்கு வருவது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றன. இதனால், மாவட்டத்தில் உள்ள, 3,000 சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டும் பயனில்லை. தேசிய நெடுஞ்சாலையில் மறியல் முயற்சி இந்நிலையில், நேற்று காலை கோவை சுற்றுலா வாகன ஓட்டுனர் ஒருவர், ஊட்டியில் தாக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், சமவெளி பகுதியில் இருந்து வந்த சுற்றுலா வாகன ஓட்டுனர், ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டுனரை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து, ஊட்டி- குன்னுார் சாலையில், தலையாட்டுமந்து பகுதியில் நுாற்றுகணக்கான சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த, ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் மற்றும் போலீசார் சுற்றுலா வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 'இரு தரப்பினரை அழைத்து மாலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,' என, உறுதி அளித்தார். இதனால், தற்காலிகமாக மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவர்த்தை தொடரும் தொடர்ந்து, நேற்று மாலை, குன்னுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., ரவி முன்னிலையில், வட்டார போக்கு வரத்து அலுவலர் பிரபாகரன் முன்னிலையில், கோவை, நீலகிரி வாகன ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், ஓட்டுனர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து, அடுத்த வாரம் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, முடிவு செய்யப்பட்டது. இதனால், இரவு, 7:45 மணிக்கு இரு தரப்பினரும் கலைந்து சென்ற னர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago