உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொக்காபுரம் அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி

பொக்காபுரம் அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி

கூடலுார்;முதுமலை, மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, முதுமலை வழியாக, இரவு நேர போக்குவரத்துக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே, பொக்காபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 16ம் தேதி, துவங்கியது.ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தும், கரகம் எடுத்து நேர்த்தி கடனை நிறைவேற்றியும் செல்கின்றனர்.பக்தர்கள் பாதுகாப்புக்காக, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு போக்குவரத்து துறை சார்பில், கூடலுார், ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. கோவில் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் வனவிலங்கு குறிப்பாக யானைகள், கோவில் வளாகத்துக்கு நுழைவதை தடுக்க, வன ஊழியர்கள் பரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. இதனால், நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். இக்கோவிலின் முக்கிய நிகழ்வான, தேர் ஊர்வலம் இன்று இரவு, 10:00 மணிக்கு நடக்கிறது.கூடலுார் வழியாக, விடிய, விடிய பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர வசதியாக, மூன்று நாட்களுக்கு, முதுமலை வழியாக, இரவில் கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.நேற்று முன்தினம், இரவு தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாக, நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. பிற மாவட்ட, மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வன ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, அதிகாரிகள் உத்தரவுப்படி, இரவில் இருசக்கர வாகனத்தை தவிர, மற்ற வாகனங்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதித்தனர். திருவிழா நாளை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை