மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
1 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
கூடலுார்;முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்தில், வறட்சியான பகுதிகளில் உள்ள தொட்டிகளில் குடிநீர் ஊற்றும் பணியை வனத்துறயைினர் துவங்கியுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், தொடரும் பனிப்பொழிவு காரணமாக, வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும், தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மசினகுடி கோட்டம் சிங்கார வனச்சரகத்தில், வறட்சியான பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகைகள் வனத்துறையினர் வாகனம் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அங்குள்ள சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை இல்லாததால், மசினகுடி வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சிங்கார வனச்சரக வனப் பகுதியில், வாகனம் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று தொட்டிகளில் ஊற்றி, அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். தொட்டிகளை கண்காணித்து தேவைக்கேற்ப தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றப்படும்,' என்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago