உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்

ஊட்டியில் குளுகுளு பயணியர் குதுாகலம்

ஊட்டி,:ஊட்டி படகு இல்லத்தில் இதமான காலநிலையை ரசித்தவாறு சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவது வழக்கம்.தற்போது, வார விடுமுறையை ஒட்டி, சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் இதமான கால நிலையை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணியர் ஊட்டியில் குவிந்தனர்.ஊட்டி படகு இல்லத்தில் நேற்று காலை முதல் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணியர் குவிந்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.பிற சுற்றுலா தலங்களிலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து விடும்.கடந்தாண்டில் படகு இல்லத்தில், 16 லட்சம் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை