மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
9 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
9 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
9 hour(s) ago
கூடலுார் : பச்சை பாக்கு விலை உயர்வால், கூடலுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதி விவசாயிகள், வயல்கள் மற்றும் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு, கிராம்பு போன்றவைகள் ஊடு பயிராக பயிரிட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யும் பாக்குகள் சமவெளி பகுதி, கேரளா, கர்நாடக மாநிலங்களும் கொண்டு செல்கின்றனர்.இரண்டு ஆண்டுக்கு முன் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு விவசாயிகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மகசூல் பாதிப்பு ஏற்படவில்லை.பல பகுதிகளிலும் நோய் தாக்குதலால் வாக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு விளையும், பாக்குக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். அதன்படி படிப்படியாக விலை உயர்ந்து தற்போது கிலோவுக்கு, 48 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன் நோய் தாக்குதலால் பாக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால், நடப்பு ஆண்டு பாக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது கிலோவுக்கு 48 ரூபாய் விலை கிடைத்து இருப்பது வரவேற்கக் கூடியது,' என்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'இதே நிலை தொடர்ந்தால் கிலோவுக்கு, 60 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது,' என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago