உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்

குன்னுார்;குன்னுாரில் கடும் பனிமூட்டம் மற்றும் குகையில் காட்டெருமை நின்றதால் மலை ரயில் தாமதமானது.நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊட்டி மலை ரயில், கடும் பனிமூட்டம் காரணமாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டது.இந்த ரயில் ஹில்குரோவ் அருகே வந்த போது, குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி காட்டெருமை விரட்டப்பட்டது. இதனால், காலை, 10:00 மணிக்கு வர வேண்டிய மலை ரயில், 40 நிமிடங்கள் தாமதமானது. எனினும் இயற்கை காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாமல் இருந்த போதும். பனிமூட்டம் இடையே செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ள நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய பலரும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை