மேலும் செய்திகள்
ரேஷன் கடை கட்டுமான பணி தரமில்லாமல் இருப்பதாக புகார்
2 minutes ago
குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா
2 minutes ago
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
3 minutes ago
ஊட்டி: மாநிலத்தில், வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்யும் முறையை மாற்றி, இணைய வழியில் (இ-பைலிங்) டிஜிட்டல் நடைமுறை திட்டம், 2023ல் அமல்படுத்தப்பட்டது. 'சர்வர் பிரச்னை, தொழில்நுட்ப கோளாறு மற்றும் பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இந்த நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும்,' என, வக்கீல்கள் வலியுறுத்தியதால், இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 1ம் தேதி முதல் 'இ--பைலிங்' நடைமுறை அமலுக்கு வந்தது. 'கட்டமைப்பு வசதி இல்லாத நீதிமன்றங்களில், இந்த நடைமுறை சாத்தியமில்லை,' என, வக்கீல்கள், 3ம் தேதி முதல், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சங்க செயலாளர் ஜெயந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வக்கீல்கள் விஜயன், பொன் ராமச்சந்திரன், ராஜேஷ் பிரகாஷ் பாபு, நந்தினி மற்றும் ரேனியா உட்பட பலர் பங்கேற்றனர். 'மாவட்டம் முழுவதும், 400க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும், வரும், 12ம் தேதி வரை போராட்டம் தொடரும்,' எனவும் தெரிவிக்கப்பட்டது.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago