உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகா முனீஸ்வரர் ஆலய திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மகா முனீஸ்வரர் ஆலய திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி;ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில், 84வது ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவை ஒட்டி, காலை, 7:45 மணிக்கு, ஸ்ரீ மகா முனீஸ்வரருக்கு, மகா கணபதி ஹோமம் மற்றும் மூல மந்திரஜா ஹோமம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, பாறை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, பால்குடம் புறப்பாடு நடந்தது. பகல், 12:10 மணிக்கு, ஸ்ரீ மகா முனிஸ்வரர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனையை அடுத்து, பிரசாத வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, பகல், 1:30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 6:00 மணிக்கு, மின் அலங்காரத்தில் மகா முனீஸ்வரர், மேளதாளம் மற்றும் வாண வேடிக்கை முழங்க, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் ஜே.எஸ்.எஸ்., ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை