உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதலையை பிடித்து முதுமலையில் விடவில்லையேல் போராட்டம்

முதலையை பிடித்து முதுமலையில் விடவில்லையேல் போராட்டம்

கூடலூர் : கூடலூர் இரும்புபாலம் ஆற்றில் விடப்பட்ட முதலையை பிடித்து வேறு இடத்தில் விட அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.கூடலூர் புத்தூர் வயல் பகுதியில் சில மாதங்களுக்கு முன் உலா வந்த முதலையை வனத்துறையினர் பிடித்து, பாண்டியார் - பொன்னம்புழா ஆற்றில் விட்டனர். தொடர்ந்து பெய்த மழையில் முதலை தென்படவில்லை. பருவ மழை நின்றதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக முதலை கரைக்கு வந்து 'ஹாயாக' ஓய்வெடுத்து செல்கிறது. இதனால், இப்பகுதி ஆற்று நீரை பயன்படுத்தும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'மக்களை அச்சுறுத்தி வரும் முதலையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் விட வேண்டும்,' என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இல்லை எனில் போராட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை