உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பூண்டு கிலோ ரூ. 300 பிற மாநில வரத்து அதிகரிப்பு

ஊட்டி பூண்டு கிலோ ரூ. 300 பிற மாநில வரத்து அதிகரிப்பு

ஊட்டி;நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம் இருப்பதால், தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் ஊட்டி பூண்டு கிலோவுக்கு அதிகபட்சம், 500 ரூபாய் வரை விற்கப்பட்டது. சந்தையில் ஊட்டி பூண்டுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்தாண்டு நவ., மாதத்திலிருந்து அவ்வப்போது பெய்த மழைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் கடும் மேகமூட்டம் நிலவுவதால், பயிர் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டது.இதனால், ஊட்டி மார்க்கெட்டுக்கு குறைந்தளவில், ஊட்டி பூண்டு விற்பனைக்கு வருகிறது. பிற மாநில பூண்டு அதிகளவில் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஊட்டி பூண்டு, கிலோ, 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பிற மாநில பூண்டு, 150 முதல், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை