உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆரஞ்சு குரோவ் சாலை சீரமைப்பு; வாகனங்கள் செல்வதற்கு இன்று தடை

 ஆரஞ்சு குரோவ் சாலை சீரமைப்பு; வாகனங்கள் செல்வதற்கு இன்று தடை

குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பார்க் ஜிம்கானா வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று (22ம் தேதி) ஒரு நாள் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் சாலையில் இருந்த தார் கற்கள் பொக்லின் உதவியுடன் அகற்றப்பட்டு தாமதமானதால், இரு-சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. 22ம் தேதி (இன்று) ஒரு நாளும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 'பணிகள் நிறைவு பெற்ற பிறகு வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்,' என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி