உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனங்களை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு அவசியம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை

வனங்களை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு அவசியம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை

பந்தலுார்:கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட, சேரம்பாடி வனச்சரகம் சார்பில், வனங்கள் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சேரம்பாடி, காவயல், எருமாடு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு வனச்சரகர் அய்யனார் தலைமை வதித்து பேசியதாவது:சேரம்பாடி வனச்சரகம் என்பது, தமிழக- கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் இடம்பெயரும் வன விலங்குகள், கிராமங்கள் மற்றும் கிராமங்களை ஒட்டிய தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி வழியாக சென்று வருகின்றன.அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்படும் வன விலங்கு மனித மோதல் சம்பவங்களால், வனத்தின் மீதும், வன விலங்குகள் மீதும் பொதுமக்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர்.மனித சமுதாயம் வாழ்வதற்கு வனமும், வனவிலங்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தீ தடுப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனத்துறையினர் மற்றும் கலை குழுவினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை