| ADDED : பிப் 16, 2024 12:27 AM
கூடலுார்:மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று துவங்கி, 5 நாட்கள் நடைபெறுகிறது.மசினகுடி அருகே, பொக்காபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா, இன்று, துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை காலை சிறப்பு பூஜைகளையும் தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் நடைபெறுகிறது. 18ம் தேதி மாலை 8:00 மணிக்கு கங்கை பூஜை நடைபெறுகிறது. 19ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கூடலுார், ஊட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்க்கள் இயக்கப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.காட்டு யானை கோவில் வளாகத்துக்குள் நுழைவதை தடுக்கவும், வனத் தீ ஏற்படுவதை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.