| ADDED : ஜன 09, 2024 09:00 PM
மஞ்சூர்;அன்னமலை முருகன் கோவிலில் பிரதோஷ நிகழ்ச்சி நடந்தது. மஞ்சூர் அடுத்த அன்னமலையில் பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. சித்திரையில் காவடி திருவிழா, கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில், நேற்று நடந்த பிரதோஷ நிகழ்ச்சியை ஒட்டி, அன்னமலை பால தண்டாயுதபாணி கோவிலில் சிவன் மற்றும் முருகனுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட ,12 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.திருவண்ணாமலை சித்தர் நாகராஜசுவாமி தலைமை தாங்கி சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.