| ADDED : ஜன 11, 2024 09:52 PM
கூடலுார்;கூடலுாரில் பாரம்பரிய உணவு குறித்து, பெண்களுக்கு செயல் முறையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது.கூடலுாரில், பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்து, சி.பி.ஆர்., சுற்றுச் சூழல் கல்வி மையம், கருணா அறக்கட்டளை சார்பில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு தலைமை வகித்து பேசுகையில், ''காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. பாரம்பரிய உணவு முறைகள் அழிவை நோக்கி செல்கின்றன. நம்மை நாம் பாதுகாத்து கொள்ள பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டும,''என்றார்.கூடலுார் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் பேசுகையில், ''நம் உணவு முறை மாற்றத்தால் இன்று, பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். இன்று பலருக்கு மருந்தே உணவாக உள்ளது. இதற்கு ரசாயனமூலம் உற்பத்தி செய்ய உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது,'' என்றார்.பயிற்றுனர் குணவதி, பாரம்பரிய உணவுகளை சமைப்பது குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்.முகாமில், சுய உதவி குழு பெண்கள் பங்கேற்றனர். ஆர்.கே., அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி நன்றி கூறினார்.