உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம்

கூடலுார்;கூடலுார், தேவர்சோலை 4வது மைல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மாணவர் களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கேத்தரின் தலைமை வகித்தார். பேரணியை தேவர்சோலை எஸ்.ஐ., கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி நலத்திட்டங்கள் குறித்த பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஊர்வலத்தில் வட்டார வளர் மைய ஆசிரியர் பயிற்றுனர் சீனிவாசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சப்ரீனா, தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் சாய்னா, துணை தலைவர் சவுகத் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி