உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்

தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்

பெரம்பலுார் : சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்ததாக, முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலுார் கலெக்டர் கற்பகத்திடம், ஐ.ஜே.கே., தலைமை நிலைய செயலர் வரதராஜன் நேற்று புகார் மனு கொடுத்தார்.மனுவில் அவர் கூறியுள்ளதாவது:முசிறி சட்டசபைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன். தொட்டியத்தில் லாட்ஜில் தங்கி இருந்தேன். என்னை முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள், முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் என் அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை