| ADDED : நவ 20, 2025 02:15 AM
புதுக்கோட்டை: ஏரி தண்ணீர் செல்லும் மடைக்கு பூட்டு போட்டதால், தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கவலை அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே சிறுமருதுார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாட்டாத்துார் ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி, செகுட்டான்டியேந்தல் கிராமத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. சில தினங்களுக்கு முன், வாட்டாத்துாரை சேர்ந்த சிலர், வாட்டாத்துார் ஏரியில் இருந்து செகுட்டான்டியேந்தல் கிராம வயல்களுக்கு செல்லும் வாய்க்கால் மடைக்கு பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால், செகுட்டான்டியேந்தல் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி நாசமாயின. செகுட்டான்டியேந்தல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.