| ADDED : ஆக 23, 2024 02:58 AM
திருவாடானை:பசுமை மற்றும் மண்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோல்கட்டாவைச்சேர்ந்த குழுவினர் ராமநாதபுரம்மாவட்டம் தொண்டிக்கு வந்தனர்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச்சேர்ந்தவர் பிரதீப்பிஸ்வாஸ் 32. இவரது மனைவி சங்கீதாபிஸ்வாஸ் 30, இவர்களின் நண்பர் அமிச்சங்கம் 33, ஆகியோர் பசுமை மற்றும் மண் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.2022 அக்டோபரில் சுற்றுப்பயணம் துவங்கிய இவர்கள் பல்வேறு பகுதிகள் வழியாக ராமேஸ்வரம் சென்று விட்டுவேதாரண்யம் செல்ல ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு வந்தனர். அவர்களை மக்கள் வரவேற்றனர்.இதுகுறித்து தம்பதியர் கூறியதாவது: நாடு முன்னேற பசுமை, மண்வளம் முக்கியம். மக்களிடம் இதுகுறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளோம். ஜார்கண்ட், அசாம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, மிசோராம், திரிபுரா, நாகாலாந்து போன்ற பல மாநிலங்களை கடந்து தமிழகத்திற்கு வந்துள்ளோம். தற்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல ஊர்களுக்கு சென்று விட்டு கோல்கட்டாவுக்கு செல்ல உள்ளோம் என்றனர்.