உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஆர்.எஸ்.மங்கலம்: இளையான்குடி அருகே நடந்த சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பழமை வாய்ந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக ஜூன் 16ல் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.ஜூலை 1ல் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை நடந்தன. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு பூர்ணாஹூதி யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்ற சிவாச்சாரியார்கள் காலை 10:05 மணிக்கு மூலஸ்தான கருவறை கோபுர கலசம், ராஜகோபுர கலசம் ஆகியவற்றில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் அறங்காவலரான சாத்தையா மில் ஸ்டோர் உரிமையாளர் தர்மராஜன், ஹிந்து அறநிலையத் துறை ஆய்வாளர் அய்யனார், என்.எஸ்.பி.குரூப் ஆப் கம்பெனி செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கிருத்திகா கபில் மனோஜ், அறங்காவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ