உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார  சங்கத்தினை  நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார  சங்கத்தினை  நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கப்பணியாளர்கள் தொடர்ந்து சங்கத்தை நடத்த தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தாமரைக்குளம் செயலாளர் சேதுலட்சுமி, மாயாகுளம் கணக்காளர் செல்வராணி, என்மனங்கொண்டான் கணக்காளர் மீனாம்மாள், ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர்கள் சொர்ணலதா, சுப்பையா, சிவசக்தி ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு, அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும்.பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை