உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி பரிந்துரைக்கும் இடமாக மாறுகிறது

கடலாடி தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி பரிந்துரைக்கும் இடமாக மாறுகிறது

கடலாடி: கடலாடி தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் வேறு இடத்தில் மருத்துவம் செய்வதற்கு பரிந்துரைக்கும் இடமாக மாறி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம மக்கள் அவசர தேவைக்காக கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். 7 ஏக்கரில் உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள கடலாடி தாலுகா மருத்துவமனையில் முறையான பராமரிப்பின்றி பல கட்டடங்கள் சேதமடைகின்றன.கடலாடியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி கூறியதாவது:கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் துறை ரீதியாக 7 டாக்டர்கள் தேவை. ஆனால் ஒரு டாக்டர் மட்டுமே இங்கு பணி செய்கிறார். மதிய நேரத்தில் டாக்டர் இருப்பதில்லை. 6 செவிலியர்கள் உள்ளனர். இங்கு மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.மேலும் 32 படுக்கை வசதிகள் கொண்டுள்ள மருத்துவமனையில் எந்த மகப்பேறும் நடப்பதில்லை. பல் மருத்துவப் பிரிவு கட்டடம் பயன்பாடின்றி கரையான் புற்றுகள் வளர்ந்துள்ளது. கட்டடங்களின் அருகில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எக்ஸ்ரே உள்ளிட்ட சாதனங்களை இயக்குவதற்கு பணியாளர் இல்லாததால் காட்சி பொருளாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்களைத் திரட்டி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி