உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தல் அலுவலர் பயிற்சி 95 பேர் ஆப்சென்ட்

தேர்தல் அலுவலர் பயிற்சி 95 பேர் ஆப்சென்ட்

திருவாடானை, : திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. முதல் கட்ட பயிற்சியில் 95 பேர் கலந்து கொள்ளவில்லை. பாகுபாடில்லாமல் செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டசபை தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணியில் இருப்பர்.அதன்படி திருவாடானை தொகுதியில் 1481 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முதல் கட்டமாக திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், எவ்வித பாகுபாடின்றி பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.உதவி தேர்தல் அலுவலர் மாரிசெல்வி, தாசில்தார் கார்த்திகேயன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு மொத்தம் 1481 பேருக்கு பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று 95 பேர் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் கட்டமாக ஏப்.7, மூன்றாம் கட்டமாக ஏப்.18 ல் பயிற்சி நடைபெறும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை