உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஈரோடு ஆணவக்கொலை: ராமநாதபுரத்தில் கையெழுத்திட வந்த பெண்ணுக்கு வெட்டு

ஈரோடு ஆணவக்கொலை: ராமநாதபுரத்தில் கையெழுத்திட வந்த பெண்ணுக்கு வெட்டு

ராமநாதபுரம்:-ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஏரங்காட்டூர் ஆணவகொலையில் கைதாகி நிபந்தனை ஜாமினில் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்த மாமியாரை வெட்டிய மருமகன் உட்பட மூவர் தப்பினர்.பாவானிசாகர் அருகே ஏரங்காட்டூர், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சுபாஷ் 24. சத்தியமங்கலம் காந்தி நகர் சந்திரன் மகள் மஞ்சு 20. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். மஞ்சுவின் பெற்றோர் சந்திரன் 45, சித்ரா 42, எதிர்ப்பு தெரிவித்தனர்.சுபாஷ் குடும்பத்திற்கு சந்திரன் தரப்பினர் அடிக்கடி மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் சுபாஷ் தங்கை ஹாசினியை 16, டூவீலரில் பள்ளியில் விட சென்ற போது சந்திரன், சித்ரா வேனில் சுபாஷ் டூவீலர் பின்னால் மோதிவிட்டு டூவீலரில் தப்பினர்.பலத்த காயமடைந்த ஹாசினி, சுபாஷ் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹாசினி இறந்தார். பவானிசாகர் போலீசார் வன் கொடுமை சட்டத்தில் கொலை வழக்கு பதிந்து சந்திரன், சித்ரா, உறவினர்கள் உட்பட 5 பேரை தேடினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் பதுங்கியிருந்த சந்திரன், சித்ராவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சித்ரா நிபந்தனை ஜாமினில் தினமும் ராமநாதபுரம் நகர் போலீசில் ஜூலை 20 முதல் கையெழுத்திட்டு வருகிறார். கேணிக்கரை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் (ஆக.,15) மதியம் கையெழுத்திட்டு விட்டு டூவீலரில் வீடு திரும்பிய போது சுபாஷ் மற்றும் இருவர் வாளால் தலை, மணிக்கட்டு, விரல் பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் பஜார் போலீசார் சுபாஷ் உட்பட மூவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை