உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலாடி, ; கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளும், திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளும் உள்ளன.2017 முதல் நடப்பாண்டு வரை பல்வேறு விவசாய நிலங்கள், நீர் பிடிப்பு பகுதிகள், கண்மாய் வழித்தட பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.7 லட்சம் முதல் 12 லட்சம் வரை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகள் கூறியதாவது:பல காலமாக விவசாய நிலங்களில் முறையாக நீர் வரத்து வந்த நிலையில் அவற்றிலிருந்து வரக்கூடிய நீர்வழித் தடங்களின் மூலமாக விளை நிலங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.பல ஆண்டுகளாக கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் இடங்களிலும் விவசாய நிலங்களுக்கு வரும் பகுதிகளிலும் தடுப்பணைகளை கட்டி இருப்பதால் நீர் வரத்தின்றி விவசாயிகள் சிரமத்தையும் தடைகளையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தியும் அப்பகுதியில் உள்ள மண்ணை கட்டுமானத்திற்கு பயன்படுத்தியும் தடுப்பணைகளை கட்டி உள்ளதால் பெருவாரியான தடுப்பணைகள் விரிசல் கண்டும் சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது.உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு வழியில்லாத நிலையில் தடுப்பணையில் நீர் சேகரிக்கப்பட்டு இருப்பதால் அவற்றை திறந்து விட வழியின்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றோம். வேளாண் துறை, கண்மாய் பாசன பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளின் ஆலோசனை இன்றி கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை.தற்போது ஏராளமான தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றை உரிய முறையில் பராமரிப்பு பணிகளை செய்யும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்த பருவமழையால் தடுப்பணைகள் பாதிப்பை சந்தித்துள்ளன.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் குழுக்களை அமைத்து சேதமடைந்த தடுப்பணைகளை எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் மராமத்து பணிகளை செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள பகுதிகளை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை