உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறி  ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பார்களா 

வாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறி  ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பார்களா 

----ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு வலம் வருகின்றனர். இந்த வாகனங்கள் மீது போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத்தினர், சுகாதாரத்துறையினர், மின் துறை,போலீஸ் என பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். தற்போது புதியதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு அந்தந்த வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் டிஜிட்டல் போர்டுகள் அரசு விதிமுறைப்படி வழங்குகின்றன.இதனை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் தங்கள் இஷ்டப்படி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர்.விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதனை கண்டறிவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அரசு வழங்கும் டிஜிட்டல் போர்டுகளில் ஹாலோகிராம் இருக்கும் இதனை ஸ்கேன் செய்தால் வாகனத்தின் அனைத்து விபரங்களும் இருக்கும்.இதற்காகவே வாகனங்களுக்கு டிஜிட்டல் போர்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.வாகன ஓட்டிகள் விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டுகின்றனர். இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்