| ADDED : ஜூன் 19, 2024 05:55 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த நரிக்குறவர்கள்4 பேரை வேட்டையாடியதாக கூறி தாக்கிய வனத்துறையினரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர்.ராமநாதபுரம் காட்டூருணி எம்.ஜி.ஆர்., நகர் நரிக்குறவர் காலனிதலைவர் தேவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வனத்துறையைகண்டித்து கோஷமிட்டனர். அதன் பிறகு கலெக்டர்விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதவாது:மே 1 ல் வனத்துறைஅதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மானைவேட்டையாடியதாக கூறி விசாரிக்க உதயக்குமார், தெய்வம்,சுகன், சுனில் ஆகியோரை அழைத்து சென்றனர். இவ்வழக்கில்மே 29 ல் முறைப்படி நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர்.இந்நிலையில் ஜூன் 13ல் வனத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று தெய்வம், சுகன், சுனில் ஆகியோரை அழைத்துசென்று கடுமையாக தாக்கினர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திவனத்துறை அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.