உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்

வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்

ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தின் நிலவும் கடும் வறட்சியால் வேப்பமரங்களின் இலைகள் கருகுகின்றன.மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பருவமழை இன்றி கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் அனல் காற்று வீசுகிறது. இதனால் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வெளியில் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.குறிப்பாக குழந்தைகளும், வயதானவர்களும் வெயில் தாக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர். தப்பிக்க தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.கடும் வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம், செடி, கொடிகளும் கருகுகின்றன. குறிப்பாக வேர் முதல் இலை வரை பல்வேறு மருத்துவ குணமுடைய வேப்ப மரங்களும் ஆர்.எஸ்மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் அதன் இலைகள் மரங்களில் கொத்துக்கொத்தாக கருகுகின்றன.பொதுவாக வேப்ப மரங்கள் கருகத் துவங்கும் காலத்தில் பொது மக்களுக்கு அதிகளவில் அம்மை நோய் தாக்கும். இதனால் பொது மக்களுக்கு அம்மை நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை