உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பராமரிப்பின்றி கருகி வருகின்றன.ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் சார்பில் ஒன்றியத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டது. திருப்புல்லாணி யூனியன் அலுவலக வலது மற்றும் இடது பக்க நுழைவு வாயில் பகுதிகளில் பல்வேறு நிழல் தரும் 150 மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.ஜூலை 10ல் நடந்த துவக்க விழாவிற்கு பிறகு மரக்கன்றுகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் வெயிலால் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்புல்லாணி யூனியன் அலுவலக முகப்பு பகுதி பசுமையாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகிறது. எனவே 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும்துாய்மை பணியாளர்கள் மூலம் முறையாக பராமரித்து அப்பகுதியை பசுமைப் பகுதியாக மாற்றுவதற்கு யூனியன் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை