உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூடுதல் தொழிலாளர்கள் நியமிக்க கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

கூடுதல் தொழிலாளர்கள் நியமிக்க கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

வாலிநோக்கம்: வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கூடுதல் தொழிலாளர்கள் நியமிக்க கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக உப்பு நிறுவனம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம். மே மாத காலத்தில் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இதுவரை போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.உப்பு நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக தொடர்ந்து நடத்த வேண்டும். ஐ.எப்.எஸ்., பிரிவுக்கு ஆண்டு தோறும் பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தரமான பைகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஒப்பந்த முறை கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வாலி நோக்கத்தில் உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைச்செயலாளர் முருகவேல் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, சங்கத் தலைவர் பச்சமால், பொதுச்செயலாளர் வடிவேல், பொருளாளர் அற்புதமணி, நிர்வாகிகள் காட்டுராஜா, கருப்பசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை