உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினைக்குளம் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தினைக்குளம் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு ஹாஜி கமல் பாட்ஷா நினைவு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். தினைக்குளம் டி.எம்.ஒய்., குரூப் கம்பெனியின் மலேசியா தொழிலதிபர் பீர்முகம்மது பள்ளியில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூ.88 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டினார்.பள்ளி புரவலர் முகமது ரபீக் மற்றும் தினைக்குளம் ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் மணிமொழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை