உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மூடல்

ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மூடல்

திருவாடானை : திருவாடானை வடக்கு தெருவில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., முன் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை சுத்தம் செய்யக்கோரி சில நாட்களுக்கு முன் தேசியக் கொடியுடன் நடு ரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம் செய்தார். அதனை தொடர்ந்து கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.கால்வாய் உடைக்கப்பட்டதால் ஏ.டி.எம். மையத்திற்குள் கால்வாயை தாண்டி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு பெண் தவறி கால்வாய்க்குள் விழுந்தார். இதனால் ஏ.டி.எம்., மையம் மூடப்பட்டது. இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். கால்வாயை விரைவில் சீரமைத்து ஏ.டி.எம்., மையத்தை திறக்க மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை