உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ்சை கடத்தியவர் யார்கண்டுபிடிக்க போலீஸ் திணறல்

அரசு பஸ்சை கடத்தியவர் யார்கண்டுபிடிக்க போலீஸ் திணறல்

திருவாடானை, : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பஸ் டிப்போவிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு அறந்தாங்கி-திருவாடானை செல்லும் (டி.என்- 55- 0690) என்ற பஸ்சை ஒருவர் கடத்தினார்.கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்ற போது தொண்டி அருகே வட்டாணத்தில் அதிகாலை 3:00 மணிக்கு எதிரில் துாத்துக்குடியிலிருந்து மீன் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதினார்.இதில் லாரி டிரைவருக்கு கால் முறிந்தது. இச்சம்பவம் தொடர்பாக அறந்தாங்கியிலிருந்து வந்த போக்குவரத்து கழக அலுவலர்கள் வட்டாணம் நிழற்குடையில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கபட்டவர் போல் இருந்தவரை அழைத்துச் சென்று அறந்தாங்கி போலீசில் ஒப்படைத்தனர்.மேலும் 50 வயதுள்ள அந்த நபரின் காலில் காயம் உள்ளது. டவுசர் அணிந்திருந்தார். மொட்டை தலையுடன் காணப்பட்டார். பீடியை புகைத்தபடி அமர்ந்திருந்தார். போலீசார் கூறுகையில், அலுவலர்கள் ஒப்படைத்த அந்த நபரை பஸ்சை ஓட்டச் சொல்லி சரிபார்த்த பின் விசாரணை செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை