| ADDED : ஆக 23, 2024 03:02 AM
ராமநாதபுரம்,:தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தை ஆக., 27ல் நடக்கிறது. அப்போது தங்களுக்கு பென்ஷன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2023 செப்., பழைய சம்பள விகித நிர்ணயம் நிறைவு பெற்றது. புதிய ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றியுள்ளது. அதுவும் 2023 செப்., உடன் நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை சென்னையில் ஆக., 27ல் நடக்கவுள்ளது. இதில் அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், அமைச்சர் பங்கேற்க உள்ளனர்.மத்திய சங்க பொது செயலாளர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளோம். ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். 65 ஆயிரம் ஊழியர்களை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்துவோம் என்றார்.