| ADDED : மே 06, 2024 12:36 AM
கமுதி: கமுதி சின்ன உடப்பங்குளம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி, 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.கமுதி அருகே முதல்நாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மதுரையில் இருந்து கமுதிக்கு காரில் வந்தனர். சின்னஉடப்பங்குளம் அருகே கருமேனி அம்மன் கோயில் அருகே வளைவில் கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம் வந்து கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மண்டலமாணிக்கத்தைச் சேர்ந்த கணேசன் 24, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திக், சக்திவேல்,வசந்தகுமார், மற்றொரு காரில் பயணம் செய்த முதல்நாடு அஜித், மணிகண்டன், பூச்செல்வி, புவனேஸ்வரி, ஜெயபிரகாஷ் உட்பட 8 பேர் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்டலமாணிக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.