உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் தெருநாய்களை கட்டுப்படுத்தப் போவது யார் தினமும் நாய் கடிக்கு ஆளாகும் மக்கள்

பரமக்குடியில் தெருநாய்களை கட்டுப்படுத்தப் போவது யார் தினமும் நாய் கடிக்கு ஆளாகும் மக்கள்

பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி பகுதியில் பெருகிவிட்ட நாய்கள் தினம் தினம் தினம் மக்களை கடிப்பதால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் நாய்கள் பெருகி உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு தெருவிலும் பத்துக்கு மேற்பட்ட நாய்கள் திரிவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் புதிதாக செல்வோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பரமக்குடி நகராட்சியில் நாய்களுக்கு கு.க., செய்வது கிடையாது. மேலும் பல நாய்கள் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு வெறி பிடித்து அலையும் நிலை உள்ளது. இதனால் தெருவில் செல்லும் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் என பாகுபாடின்றி கடிக்கிறது.இந்நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனை துவங்கி அருகில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் நாய் கடிக்கு ஊசி போட்டுக் கொள்ளும் சூழல் உள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் மாணவர்கள் குழந்தைகள் வீடுகளில் உள்ளனர்.தொடர்ந்து வரும் மாதம் பள்ளி திறக்கும் என்பதால் பெற்றோர், நாய் பெருக்கத்தை கண்டு அதிர்ச்சியில் உள்ளனர். ஆகவே குறைந்தபட்சம் வெறி பிடித்த மற்றும் நோய்பட்ட நாய்களை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை