உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் டிராபிக் போலீசார் இன்றி போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரத்தில் டிராபிக் போலீசார் இன்றி போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரம்: -தேர்தல் பாதுகாப்புக்கு போக்குவரத்து போலீசார் வெளியூர் சென்றதால் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ராமேஸ்வரத்தில் பணியாற்றிய பெரும்பாலான சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்றனர்.நேற்று விடுமுறை நாளையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.இதில் ராமேஸ்வரத்தில் நான்கு சாலைகள் சந்திக்கும் திட்டக்குடியில் எப்போதும் இரு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவார்கள். நேற்று போலீசார் ஒருவர் கூட இல்லாததால் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.புனித தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் வாகனங்கள் அதிகமாக வருவதால் இங்கு நிரந்தரமாக போக்குவரத்து போலீசார் பணிபுரிய எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை