உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழ நாட்டார் கால்வாய் பகுதியில்  பிளாஸ்டிக் கழிவால்  அடைப்பு

கீழ நாட்டார் கால்வாய் பகுதியில்  பிளாஸ்டிக் கழிவால்  அடைப்பு

ராமநாதபுரம்: சித்தனேந்தல் பகுதி கீழ நாட்டார் கால்வாய்க்கு வரும் கிளை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் பகுதிக்கு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சித்தனேந்தல் தடுப்பணை மூலம் தடுத்து கீழ நாட்டார் கால்வாயில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொடிருக்கிறது.இதில் கீழ நாட்டார் கால்வாய்க்கு வரும் கிளைக் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால் கீழ நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கீழ நாட்டார் கால்வாயில் தண்ணீர் வருவது அரிது. இது போன்ற நேரங்களிலாவது பொதுப்பணித்துறையினர் கால்வாய்களை அடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை