உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தி.மு.க., அரசை கண்டித்துஅ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்துஅ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், -ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., ஆட்சியில் சட்டம்ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். சென்னை பல்லாவரத்தில் இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியை வரும் தேர்தலில்மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் சதன்பிரபாகர், ஆணிமுத்து, ராம்கோ சேர்மன் (பொ) தஞ்சி சுரேஷ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தால் பாரதிநகரில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை