உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தொண்டி கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்

 தொண்டி கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் துள்ளி குதித்த டால்பின்களை மீனவர்கள் வீடியோ எடுத்து ரசித்தனர். தொண்டி கடலுக்கு நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது மூன்று நாட்டிகல் தொலைவில் 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் துள்ளி குதித்து நீந்தின. அவற்றை மீனவர்கள் அலைபேசியில் வீடியோ எடுத்தனர். மீனவர்கள் கூறியதாவது: டால்பின்கள் பொதுவாக நடுக்கடலில் தான் கூட்டமாக இருக்கும். இருப்பினும் இனப்பெருக்க காலத்தில் நடுக்கடலில் இருந்து கடற்கரை நோக்கி வந்து திரும்பி செல்லும். தொண்டி பகுதிக்கு வருவது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் அவற்றை பிடிப்பது இல்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை