உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திரவுபதி அம்மன் கோயில் பூக்குழிவிழா கொடியேற்றம்

திரவுபதி அம்மன் கோயில் பூக்குழிவிழா கொடியேற்றம்

நயினார்கோவில் : -பரமக்குடி அருகே நயினார்னகோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழிவிழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த திரவுபதி அம்மன் கோயிலில் பூமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அனுக்கை, அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றம் நடந்தது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 20 சக்தி கரகம் எடுத்தல், பாரத கதை ஆரம்பம் ஆகும். பின்னர் வல்லம், கரைமேல் குடியிருப்பு, தாளையடி கோட்டை, மேமங்களம், நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பீம வேஷம் ஊர்வலம் நடக்கும்.மார்ச் 22 இரவு திருக்கல்யாணமும், மார்ச் 23 சக்கராபுரி கோட்டை வைபவம் நடக்கிறது. மார்ச் 24 அர்ஜுனன் தபசு நிலை, மறுநாள் துரியோதனன் படுகளம் நிகழ்வு நடக்கிறது.மார்ச் 26ல் மாவிளக்கு ஏற்றுதல், இரவு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழியில் இறங்கும் வைபவம் நடக்கிறது. மார்ச் 27 பால்குட விழா, சுவாமி வீதிகளில் புறப்பாடாகி மஞ்சள் நீராட்டு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி