உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் மழைநீர் சூழ்ந்த கால்நடை மருந்தகம் திறக்கப்படாத கட்டடம் வீணாகிறது

நயினார்கோவிலில் மழைநீர் சூழ்ந்த கால்நடை மருந்தகம் திறக்கப்படாத கட்டடம் வீணாகிறது

நயினார்கோவில் : -பரமக்குடி அருகே நயினார்கோவில் கால்நடை மருந்தகம் செயல்படாத நிலையில் புதிய கட்டடம் திறக்கப்படாமல் மழைநீர் சூழ்ந்து வீணாகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி, கைத்தறி நெசவு தொழிலுக்கு முன்னோடியாக விவசாயம் உள்ளது. இதன்படி கிராமங்கள் தோறும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக விளங்குகிறது. இதற்காக ஒன்றியங்களில் கால்நடை மருந்தகங்கள் ஆங்காங்கே செயல்படுகிறது. நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்குள்ள பழைய கட்டடம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய கால்நடை மருந்தகம் பழைய மருந்தகத்திற்கு அருகில் கட்டப்பட்டது. ஆனால் மருந்தகம் தொடர்ந்து செயல்படாமல் உள்ளதுடன் புதிய கட்டடமும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.இங்கு ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மருந்தகத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்குவது வழக்கம். தற்போது மூன்று மாதத்திற்கும் மேலாக கட்டடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே துறை அதிகாரிகள் கால்நடை மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதுடன் மழைநீர் தேங்காமல் தடுக்கவும், தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை