மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே ரூ.38.95 கோடியில் அமைத்த மீன் இறங்கு தளம், துாண்டில் வளைவு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.மண்டபம் வடக்கு கடற்கரையில் ரூ. 30 கோடியில் மீன் இறங்கு தளம் மற்றும் துாண்டில் வளைவு பாலமும், தங்கச்சிமடத்தில் ரூ.8.95 கோடியில் மீன் இறங்குதளமும் அமைக்கப்பட்டது. இங்கு 175 விசைப்படகுகள், 250 நாட்டுப்படகுகளையும் புயல், இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாப்பாக நிறுத்த முடியும்.புதிய பாலம், மீன் இறங்கு தளத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்.எல்.ஏ., காதர்பாட்சா, மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, சகாயம், ஜாகிர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago